ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று திரையரங்கில் மதராஸி திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில், மதராஸி படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சிலர் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதே போல் சிலர் படத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டி தங்களது விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here