கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பணியகத்தின் தகவலின் படி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் 01.05 கிலோ கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் ஈட்டியதாக சந்தேகப்படும் 100,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
முதலாவது சந்தேகநபர், ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாக கூறி ஹேஷ் போதைப்பொருளை கடத்தியதாக தகவல் கிடைத்தது. ரத்மலானை பகுதியில் மாதந்தோறும் 30,000 ரூபாய் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வீட்டில் இருந்து இந்த கடத்தல் முன்னெடுக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
அந்த வீட்டில் சோதனை நடத்தும்போது, மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார். அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.







