ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ என்ற வித்தியாசமின்றி, அரசியல்வாதிகள் தங்கள் இனம் மற்றும் மத அடிப்படையில் மட்டுமே சிந்தித்து செயற்படுகின்றனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி புத்தசாசன அமைச்சை உருவாக்கியுள்ளதையும், ஆனால் பிற மதங்களுக்காக எந்த அமைச்சும் நிறுவப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவரும் கூட “புத்தசாசன அமைச்சுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கினீர்கள்?” என கேட்பது வருந்தத்தக்கது என்றும் அவர் கூறினார்.

“இதனைப் பார்க்கும் போது, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இரண்டும் ஒரே போக்கில் நடக்கின்றன — அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போலவே செயற்படுகின்றனர்,” என கோடீஸ்வரன் கடுமையாக விமர்சித்தார்.

இதை மாற்றி, இன-மத வேறுபாடுகளைத் தாண்டிய சமநிலை அரசியல் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here