நிர்ணய விலைக்கு மேலதிகமான விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுபாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கஎச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரிசி மாபியா தொடர்பில் இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பி இருந்தார்.

இதற்குபதில் அளித்த அமைச்சர் இவ்வாறுஎச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது தொடர்ந்தும் பதிலளித்தஅமைச்சர்,

நாட்டு மக்களின் வருடாந்த அரிசி தேவை2.7 மில்லியன் மெற்றிக்தொன்னாகும்.அதில் வீட்டுத் தேவைக்காக 2.4 மில்லியன்மெற்றிக்தொன் அரிசியும், கைத்தொழில்துறைக்காக 0.3 மில்லியன் மெற்றிக்தொன்அரிசியும் தேவைப்படுகிறது.

அதேநேரம் உள்நாட்டு அரிசி உற்பத்திகாலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. கடந்தசிறுபோகத்தில் உத்தேசிக்கப்பட்ட அரிசிவிளைச்சலை விட, அறுவடை செய்யப்பட்டநெல்லின் அளவு குறைவடைந்துள்ளது.எனவே ஓரளவு தட்டுப்பாடு நிலைகாணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

மேலும், கீரி சம்பா உள்ளிட்ட சில அரிசிவகைகளுக்கு மேற்கொள்ளப்படும்விலைகள் தொடர்பில் தொடர்ச்சியாகஆராயப்பட்டு வருகிறது.

சில அரிசிகளுக்கான விலைமனு கோரலின்போது, கீரி சம்பா அரிசி சந்தைக்கு நிரம்பல்
செய்யப்படவில்லை. இதனால் ஒக்டோபர் மாதம் முதல் கீரி சம்பா அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அத்துடன், அரிசி விலையை நுகர்வோர்அறிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர்
விவகார அதிகார சபையினூடாகநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விற்பனையாளர்கள், அரிசி ஆலைஉரிமையாளர்கள், கொள்வனவாளர்கள்,
விநியோகஸ்தர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பினரும் விலை தொடர்பில்அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நிர்ணய விலைக்குமேலதிகமான விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here