பேருந்தில் கொழும்புக்கு கஞ்சாவை கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூனாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உடனடி வீதித் தடையின் போது, ​​இரண்டு பேருந்துகளில் இருந்து 5 கிலோ 800 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றிய போது, ​​இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 45 மற்றும் 47 வயதுடைய கட்டுபொத்த மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளை வெளிக்கொணர பூனாவ பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here