பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனதா விமுக்தி பெரமுனவின் கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் இன்று (05.08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அதன்படி கட்டுப்பணம் செலுத்திய மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்த 10 வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேரும் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here