கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கைரேகைகள் மற்றும் துப்பாக்கியில் காணப்படும் கைரேகைகள் பொருத்தப்படுமா என ஊடகவியலாளர்கள் வினவினார்கள்.

அதற்கு பதிலளித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், அவர் நடந்து சென்ற விதம், கையடக்கத் தொலைபேசி, முக அடையாளங்கள் மற்றும் விஞ்ஞான பூர்வ சான்றுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்த நபர் தான் எனத் தெரியவந்துள்ளது.என்று குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here