களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மின் அமைப்பிலிருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்கு களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் ஏற்பட்ட தீயை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை , தீயை கட்டுப்படுத்தச் சென்ற தீயணைப்பு வீரர் மூச்சுத் திணறல் காரணமாக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.








