சுகாதார அமைச்சின் ஊழல் விசாரணைப் பிரிவின் 27 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றங்கள், தகவல்களை மறைக்கும் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சுகாதார சேவையில் மட்டுமன்றி அரச துறையில் பல ஊழல் மோசடிகள் நடந்துள்ளன.

அவற்றை வெளிகொண்டு வருவதற்கு அதிகாரிகளால் முடியாமல் போயுள்ளது.

நாம் சட்டத்தை தெளிவுபடுத்த வேண்டும். இன்று இதுபற்றி பேசும்போது சுகாதார துறையின் ஊழல் விசாரணைப் பிரிவிலுள்ள 30 பேரில் 27 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். அல்லது அவர்கள் தவறு செய்தார்கள் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் ஏற்றுக் கொண்டமையால் இவ்வாறு நடந்திருக்கலாம்.

அப்படி இல்லை என்றால் பழைய தகவல்களை அறிந்துள்ளவர்களை இடமாற்றி ஊழல் விசாரணைப் பிரிவினால் தகவல்களை தேடி கொள்ள முடியாத நிலையை உருவாக்குவதற்காகவும் தகவல்களை அழிப்பதற்காகவும் இவ்வாறு செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here