பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியில் இருந்து நேற்று புதன்கிழமை (26/03/2025) பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் திருமணம் முடித்த பெண் ஒருவருடன் திருமணம் முடித்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது அதனை புகைப்படம் எடுத்து முகநூலில் பிரசுரித்த சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை (25/03/2025) பொத்துவில் பொலிஸாரால் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதயடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜனவரி தொடக்கம் இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்கம் மீறி நடந்துகொண்ட 3 பொலிஸாரை பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here