வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன், யானையும் படுகாயமடைந்தது.

குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (17.12.2024) இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி மீன்களை ஏற்றிச்சென்ற கூலர் ரக வாகனம் பிரதான வீதியில் நின்றிருந்த காட்டுயானையுடன் மோதியுள்ளது.
இதனால் வாகனம் பலத்தசேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானர். இதேவேளை வாகனத்தில் மோதிய யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் செயற்பாடுகளில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.








