காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இன்று (27/1/2025) நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (26/1/2025) இடம்பெற்ற மோதலில் காலி சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த கைதிகளில் இருவர் காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், எஞ்சிய இருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், கைகலப்பு ஏற்பட்டதையடுத்து கட்டுப்பாட்டை மீறிய தகராறு ஏற்பட்டது.
இதேவேளை, தற்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹுங்கல்ல ‘லோகு பாட்டி’ மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகிய இரு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் வெடித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








