கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன்  பகுதியில் நேற்று இரவு வேக்க் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன்  மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து பரந்தன்  நோக்கி சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு பின்னால் சென்று அதிக வேகத்தில் சென்ற  மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரன் காயமடைந்த நிலையில்  கிளிநொச்சி  மாவட்ட  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றைய  மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தின் போது D08 உருத்திரபுரம் கிளிநொச்சி யை சேர்ந்த  வைகுந்தவாசன் குமணன்(வயது – 25) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here