எப்பாவளையில் நேற்று வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தையொன்றும் படுகாயமடைந்துள்ளது.

தலாவ – கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அருகில், வேன் சாரதியான அனுராதபுரத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் உறங்கியதால், வாகனம் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here