கிளிநொச்சி மாவட்ட முன்னால் அரசாங்கதிபர் கந்தையா பொன்னம்பலம் அவர்களின் நினைவு நிகழ்வும் திருக்குறள் மற்றும் சிலப்பதிகார விழாவும் கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் சங்க மண்டபத்தில் வைத்தியர் ம.ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்கதிபர் சு.முரளிதரன் கலந்து கொண்டிருந்தார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முன்னாள் கல்வி மற்றும் சமூக சேவைகள் அமைச்சுக்களின் செயலாளர் இ.ரவீந்திரன், தமிழ் மணி அகளங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் தமிழ் சங்க உறுப்பினர்கள், ஓய்வு நிலை ஆரம்பகல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












