சமீப காலங்களில் குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்களும், 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தலா 12 சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கடந்த கால குற்றங்கள் குறித்த தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் இதேபோன்ற நிலைமை காணப்படுவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here