மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவு லக்சபான தோட்டத்தில் இன்று (03.09) தேயிலை கொழுந்து பறிக்க சென்றவர்களில் 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கியவர்கள் மஸ்கெலியா லக்சபான தோட்டத்தை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது இவர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலை செடியின் வேர் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு களைந்து இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதாகவும் மற்றைய நால்வர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here