இலங்கையில் சித்திரவதைக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero Tolerance Policy) கொள்கையை (சித்திரவதை போன்ற தவறுகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத கொள்கை) அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐநா சபையின் சித்திரவதைத் தடுப்பு உபகுழு (SPT) ஜூன் 15 முதல் 24 வரை இலங்கையில் ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களை ஐநா குழு ஆய்வு செய்ய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளை மதிப்பதோடு, சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சியை உறுதிப்படுத்த அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டுக்குக்கு பின்னர் ஐக்கிய நாடுகளின் சித்திரவதையை தடுப்பதற்கான உபகுழு தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ளது.

சிறைச்சாலை மற்றும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீது வரைமுறைகளை மீறி கொடுமை செய்தல், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளுதல் போன்றவற்றை குறித்த ஐ நா குழு ஆய்வு செய்கிறது .

சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தங்கள் பலவற்றில் இலங்கை கையொப்பமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here