ஹப்புத்தளை – தங்கமலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம்(15.10) பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
பின்னர் அவர் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ ஆதார வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 65 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.








