ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கம்பஹா, தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்களும் 26 வயதுடைய இளைஞனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோ 15 கிராம் ஐஸ் போதைப்பொருள், 4 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக மீகஹவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here