களுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 31 லீற்றர் (41 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,950 லீற்றர் (12 பீப்பாய்கள்) கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








