கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்ட  விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும்,மதத்தையும்  இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது.

உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்

இதனால் பாதிக்கப்பட்ட  தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here