சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச தொடர்புத் துறையின் பிரதி அமைச்சர் சன் ஹையன், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) கொழும்பு அலரிமாளிகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரக அதிகாரிகளுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், சரோஜா பால்ராஜ், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமலி வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியாவின் பணிப்பாளர் நாயகம் இந்த சந்திப்பில் ருவந்தி டெல்பிட்டிய கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here