முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்ஹோங்குக்கும் இடையிலான இன்று (12) காலை கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான கலந்துரையாடலில், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள அரசியல் நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கொழும்பில் உள்ள தமது உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவும் சீனத் தூதுவர் இதேபோன்ற கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

சீனத் தூதுவர் எதிர்வரும் காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here