பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் (04) சீனா சென்றார்.
சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வருமாறு தனது நட்பு நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
அந்தவகையில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீனா விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் சீனா சென்றார்.
நேற்று (05) சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இருநாடுகளுக்குமிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.








