சீனாவில் அளவுக்கு அதிகமாகப் பெய்துவரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 25 போ் உயிரிழந்தனா்.
தொடா் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிசுவான் மாகாணத்தில் வெள்ளத்தால் ஒரு கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்ள்ளன. 29 போ் மாயமாகியுள்ளனா்.
மேலும் ஷான்க்ஸி மாகாணத்தில் நெடுஞ்சாலை பாலம் ஒன்று இடிந்து 15 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் மாயமான 20 காா்கள் மற்றும் 30 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








