புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கவலை வெளியிட்டுள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அங்கு வருகைதந்திருந்தார்.

அந்த நேரத்தில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமலிருந்த பிரதி அமைச்சர், அங்கிருந்து வெளியேறினார்.

மேலும் அவர் தனது ஓட்டுநரை தொலைப்பேசியில் கழுதை என்று அழைத்த சம்பவம் பரபரப்பான பேசு பொருளாக மாறியது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் இதைப் பற்றி உரையாற்றினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்புடைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது பிரதி அமைச்சரின் சாரதியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சில கவலைகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மன அழுத்தச் சூழ்நிலைகளில் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடும் என்றும், பிரதி அமைச்சரின் சார்பாகக் கவலை தெரிவிப்பதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here