பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியான ககாயன் மாகாணம் அருகே உருவாகியுள்ள ‘ரகசா’ புயல், தற்போது பல நாடுகளில் பெரும் அவதியையும், முன்னெச்சரிக்கையும் உருவாக்கியுள்ளது.

இந்த புயலின் காரணமாக, மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் நிலையில், பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 10,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளது.

‘ரகசா’ புயல், தற்போது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், சீன அரசு 4 இலட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது.

மேலும், புயலின் தாக்கம் காரணமாக,

500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹொங்கொங் விமான நிலையம் 36 மணி நேரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

புயல் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய பாதையில் உள்ள தைவானிலும், புயலுக்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புயலால் ஏற்படும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக, பிலிப்பைன்ஸில் நிலச்சரிவுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here