இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் (CERT) கீழ், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் தீம்பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்கும் புதிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை டிஜிட்டல் அடையாள அட்டை, தேசிய தரவு பகிர்வு தளம் மற்றும் இலங்கை அரசு மேகம் உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளை முன்னெடுத்து வருவதால், நாட்டின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது இம்முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

இந்த முயற்சிகளின் வெற்றிக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவது அவசியம் என அரசாங்கம் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த ஆய்வகத்திற்காக இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிபுணத்துவமும் கோரப்படவில்லை என அரசாங்கப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய இந்த ஆராய்ச்சி பிரிவு, சைபர் அச்சுறுத்தல்களை கண்டறிந்து அதனை எதிர்கொள்வதில், தீம்பொருட்களை விரிவாக பகுப்பாய்வு செய்வதில் மற்றும் உன்னத திறன் வாய்ந்த மனிதவளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.

இது டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக செயல்படும் ஜனாதிபதி மூலம் முன்மொழியப்பட்டதாகவும், நாட்டின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக இது கருதப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here