நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனது பெயருக்கும் கௌரவத்துக்கும் பங்கும் விளைவிக்கக்கூடிய விதமாக அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதற்கும், இணைய ஊடகங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நடவடிக்கை எடுத்ததாக கூறி, அவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக இழப்பீடு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாவது:

நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் மேற்கொண்ட கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தனது அரசியல் நடவடிக்கையை பாதிப்பதாக உள்ளன. அவரிடம் ஐந்து கோடி ரூபாய் (Rs. 50 million) நஷ்ட ஈடு கோரியுள்ளேன். நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் நிரூபிக்க முடியாவிட்டால், அவரால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் கௌரவ களங்கத்திற்கு ஈடாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியதாவது, இதுவரை எந்த நீதிமன்ற வழக்குகளும் அல்லது காவல்நிலைய விசாரணைகளும் அவருக்கு எதிராக நடைபெறவில்லை எனவும், நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை நிரூபிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here