தலாவ, ஜெயகங்கை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஒரு பயணி பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
இச் சமப்வம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தம்புத்தேகமா மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் அவரை நவம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேஜிஸ்டிரேட் நீதிபதி காயத்ரி ஹெட்டியாராச்சி இந்த உத்தரவை வெளியிட்டார்.
மேலும், தம்புத்தேகமா பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு விபத்து தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி, நீதிமன்றத்திற்கு முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவும் இடப்பட்டது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்து கன்டக்டர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ரூ. 2 லட்சம் சரீரபிணையில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இந்த விபத்து தொடர்பில் தெரிவிக்கையில்,
சாரதியின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற இயக்கத்தினால் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர்கள் , சாரதி வீதியில் வந்த மோட்டார் சைக்கிளை தவிர்க்க முயற்சித்த போது விபத்து நிகழ்ந்ததாகவும், அவரது விரைவான சிந்தனை மற்றும் திறமை காரணமாக பேருந்து ஆற்றில் கவிழ்வது தடுக்கப்பட்டுஅதன் மூலம் மிக மோசமான விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறினர்.
அந்த நேரத்தில் பேருந்து ஓட்டுநர் போதையில் இல்லை என்பதாலும், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் என்பதால், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதாலும், சந்தேக நபர்களை ஜாமீனில் விடுவிக்குமாறு வழக்கறிஞர்கள் கோரினர்.
நீதிபதி இரு தரப்பினரும் வழங்கிய விவரங்களை பரிசீலித்துப் பார்த்து, சாரதியை பிணையில் விடுவிக்குமாறு கோரிய கோரிக்கையை நிராகரித்து, அவரை நவம்பர் 18 வரை விளக்கமறியலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.








