புத்தளம் உப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு தனியார் நிறுவனமொன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் புத்தள மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்ன குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது நாட்டிலுள்ள உப்புப் பற்றாக்குறை காரணமாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து நாட்டிற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இதில் 1,485 மெட்ரிக் தொன் உப்பு சமீபத்தில் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவற்றில் ஒரு தொகை உப்பு நேற்று (30) புத்தளம் உப்பு நிறுவனத்திற்கு கிடைக்கவிருந்ததாகவும், ஆனால் அவை தனியார் நிறுவனமொன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








