காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








