தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் மௌனமாக இருந்தாலும் நாமல் ராஜபக்சவுடன் கிராமம் கிராமமாக சென்று செய்றபாட்டு அரிசியலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையின் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்ச என்பதை உறுதியாக நம்புகிறேன்.

மகிந்த ராஜபக்ச அணியில் அடுத்த தலைவர் நாமல் ராஜபக்சவுடன் எதிர்வரும் நாட்களில் பயணிக்க எதிர்பார்க்கின்றேன்.

2015ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் இந்நாடு பின்னோக்கி சென்றதாகவும் அதற்கு காரணம் அவர்களை திருடர்கள் என போலியாக குற்றம் சுமத்தியமையே ஆகும்.

பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு முன்னர், இராஜினாமா செய்து மீண்டும் ஒரு முறை ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஒப்படைத்து விடுங்கள்.

இந்த நாட்டை நடத்துவதில் அதிக அனுபவம் கொண்ட குழு அதுதான்.

இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக நாங்கள் வழிநடத்தத் தயாராக இருக்கிறோம்.

சட்டத்தை அமல்படுத்துங்கள், அரசியல் வேட்டையை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here