கொழும்பு மாநகரசபைக்குள் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் வீட்டு நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

“கொழும்பு மாநகர சபை பிரதேசத்தின் குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும் உங்கள் வீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று பிரேமதாச அறிவித்துள்ளார்.

தற்போதைய நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச, வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயனுள்ள வேலைத்திட்டங்கள் இல்லாததைக் குறிப்பிட்டார்.

மேலும் இம்மாதம் 21ஆம் திகதி தொடக்கம், தலைநகர் பிரதேசத்திற்கான நவீன அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here