இந்தியாவின், பெரம்பலூர் மாவட்டத்தில் ‘பார்வோ வைரஸ்’ பரவல் அதிகரித்துள்ளதால் இரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய்க் குட்டிகள் அதிகமாக உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது.

தெருநாய்கள் மட்டுமல்லாமல் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் இந் நோய் வேகமாக பரவி வருகிறது.

இந் நோய் அறிகுறியாக பசியில்லாமல் போகுதல், காய்ச்சல், உடல் வெப்பம் குறைதல், வாந்தி, இரத்தம் கலந்த துர்நாற்றத்துடன் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மேலும் இது தொடர்பில் கால்நடை பாதுகாப்பு துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here