தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து கொடுப்பனவுகளும் ஒரே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கட்சியின் நிதி பொரளையிலுள்ள மக்கள் வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின்னர், குறித்த பணம் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மக்களுக்கு அதிகபடியான சேவைகளை வழங்குவதற்கு வாய்ப்பளிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.








