ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது இலங்கைக்கு சாதகமாக அமையும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (04.07) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், உயர் நீதிமன்றம் தேர்தலை ஒத்திவைத்தால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் நடாத்தப்பட்டால் எந்தவொரு வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெற மாட்டார்கள்.

எனவே கட்சிகள் விருப்பு வாக்குகளை சுற்றி வேலை செய்ய வேண்டும். இவ்வாறான அதிகாரம் நாட்டின் தற்போதைய ஸ்திரத்தன்மையை மாற்றும். நாடு ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடும், இது நமது பொருளாதாரத்தையும் மோசமாக பாதிக்கும் என கூறியுள்ளார்.

அத்துடன் நாம் மெதுவாக நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் மீண்டும் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குவது நமது நாட்டுக்கு கேடு” என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here