சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (11) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில், 2025 செப்டம்பர் இரண்டாவது வார அமர்வுத் திட்டம் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, செப்டம்பர் 23 முதல் 26 வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 9.30 – 10.00 வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.
காலை 10.00 – 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகள்.
காலை 11.00 – 11.30 வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








