எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

போதைப்பொருள் கொள்கலன்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொண்ட பிரதமர், “அது எங்கிருந்து வந்தது? எவ்வாறு வந்தது?” என்ற விவரங்களை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இதைச் சுற்றியுள்ள அபாயங்கள் குறித்து யாரும் சிந்திப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

“போதைப்பொருள் குறித்த விவாதங்களில் சிலர் காவல்துறையில் பணிபுரிந்தவர்களைப் போல பேசுகிறார்கள்,” என அவர் தெரிவித்தார்.

அதேநேரம், தங்களது தரப்பினரிடம் சந்திக்கும் தாய்மார்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையையே முன்வைத்து வருவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

“நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியே – போதைப்பொருள் கலாசாரத்தை முழுமையாக ஒழிப்பது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உறுதியோடு முன்னெடுத்து வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here