ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றார், எனவே நாங்கள் இன்று அவருக்கு ஆதரவளிக்கிறோம். அன்று மக்கள் வரிசையில் நின்று இறந்தனர். அப்போது நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஒரு வீரனைப் போல ஏற்றுக்கொண்டாரென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் எங்களுடைய ஆதரவையும் அவர் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகளை மீண்டும் விவசாய நிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் உரங்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கினோம்.
அதனைத் தடுக்க ஜே.வி.பி என்ன தடைகளை ஏற்படுத்தினாலும் மக்களுக்கு உர மானியம் வழங்குவதை நாங்கள் நிறுத்தவில்லை.
அரசின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தால், இன்று நாட்டில் அரிசி கூட உற்பத்தியாகியுள்ளது. நமது எதிர்கால அரசாங்கத்தின் கீழ், அரிசியை ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் உயர்த்தப்படும்.
மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.









