நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 93 பேர் காயமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








