பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் தொடர்பாக எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. நீதி அமைச்சர் தலைமையில் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்குக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்தச் சட்டத்தை நீக்கமுடியும்.

அதேபோல் திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டமொன்றும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது.

மேலும் அரசியல் பழிவாங்கல் நோக்கில் தடுத்துவைத்தல் உள்ளிட்ட விடயங்கள் நீக்கப்படும் எனவும் ஜனநாயக வழிமுறைகளுக்கமைய புதிய சட்டம் அமையும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here