நாட்டில் பயங்கரவாத சவால்களை சமாளிக்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைப்புகளும் தனிநபர்களும் சேர்ந்த 240 பேர் கொண்ட குழு தயார் செய்த யோசனைத் தொகுப்பு, நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

முன்னைய அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தும், இதுவரை எந்த புதிய சட்டமும் இறுதியாக உருவாக்கப்படவில்லை என்றும், தற்போது புதிய சட்டத்தை தயாரிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here