பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி உள்வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி மைல்கல்லுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந் நிலையில் பளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(19.09.2024) பிற்பகல் 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முகமாலைப்பகுதியைச்சேர்ந்த 34மற்றும் 25வயதுடையவர்களே படுகாயம் அடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here