பாகிஸ்தானில் உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் இன்று (09.11.2024) காலை பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயம் அடைந்தனர்.

தொடருந்து ஒன்று நடைமேடைக்கு வருவதற்குச் சற்று முன்னதாக குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குண்டு வெடிப்பு ஏற்பட்ட போது தொடருந்து நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here