இந்தியா மீது பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த ட்ரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இந்த தாக்குதலானது உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் நடத்தது.
இந்த ட்ரோன்களை அழிக்க இந்திய இராணுவம் பல வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.







