நாடாளுமன்ற அமர்வு இன்று (ஜனவரி 21) காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது.
இதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 22ன் (1) முதல் (6) வரை பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளுக்கு முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதுடன், புதன்கிழமை (22) நடைபெறவிருந்த விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.








