வழமையான செயற்பாடுகளுக்கப்பால் வெளிநாடுகளிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ அரசாங்கம் கடன் பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நாங்கள் கடன்பெறவில்லை. திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகள் காலாவதியாகும்போது புதிதாக பிணைமுறி வெளியிடுவது மத்திய வங்கியில் இடம்பெறும் வழமையான செயற்பாடாகும். அதற்கு அப்பால் புதிதாக வேறு எங்கிருந்தும் கடன் பெறவில்லை.
திறைசேரியும் இதுதொடர்பில் விளக்கமளித்திருந்தது. பிணைமுறிகளுக்கான காலம் முடிவுறும்போது புதிய பிணைமுறி பத்திரங்கள் வெளியிடப்படும். இது ஒரு வட்டச் செயற்பாட்டை போன்று எதிர்காலத்திலும் இடம்பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.








