உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவசியம் ஏற்படுமாயின் இந்தப் புதிய யாப்பில் திருத்தங்களைச் செய்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் “தற்போது, அரசாங்கம் “உறுமய” மற்றும் “அஸ்வெசும” உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அத்துடன் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் கிராமிய உணவுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் போசாக்குக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க முடிந்துள்ளது. என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here